தஞ்சை பெரியகோயில் நுழைவுகோபுரம்! இடி தாக்கி சேதம்!!

தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜசோழன் சேர நாட்டின் மீது கி.பி. 988 ஆம் ஆண்டில் படையெடுத்து சென்று வென்றதன் நினைவாக தஞ்சை பெரிய கோயிலில் கேரளாந்தகன் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.60 ஆண்டுகளுக்கு முன் திருட்டப்பட்ட ராஜராஜசோழன் மற்றும் அவரின் துணைவியாரின் ஐம்பொன்னால் ஆன ரூ.150 கோடி மதிப்புள்ள சிலைகள் கடந்த வாரம் குஜராத்தில் மீட்கப்பட்டு தஞ்சைப்பெரிய கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று தஞ்சையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.தஞ்சை பெரியகோவில் உள்ள கேரளாந்தன் கோபுரத்தில் இடி தாக்கியது. இதனால் கலசங்கள் உள்ள பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மதம் பிடித்து பாகனை கொன்றது, தற்போது கோபுரத்தில் இடி தாக்கயது குறித்து பக்தர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here