தாயின் இறுதிச்சடங்கின்போது மாரடைப்பால் மகனும் பலி!

சவுதிஅரேபியா: தாயின் இறுதிச்சடங்கின் போது மகனும் உயிரிழந்த சோக சம்பவம் ரியாத் நகரில் நடந்துள்ளது.
ரியாத்தை சேர்ந்த கல்வியாளர் சுலைமான் முகமது.இவர் தாய் உடல்நலமின்றி பல ஆண்டுகள் இருந்துவந்தார்.
தாயை தனது சகோதரர் பொறுப்பில் விட்டிருந்தார் சுலைமான்.
பணிச்சுமையால் தாயை அவர் அடிக்கடி பார்ப்பதற்கு முடிவதில்லை.இந்நிலையில் தாய் இறந்தது அவருக்கு மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்தியது.
தாயின் உடலை புதைக்கும்முன் நடைபெற்ற பிரார்த்தனையின் போது மயங்கிச்சரிந்தார் சுலைமான்.
திடீர் மாரடைப்பால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது உடலை தாயின் அருகிலேயே குடும்பத்தினர் புதைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here