உம்ரா செய்ய வாருங்கள்! கத்தார் மக்களுக்கு சவுதி அழைப்பு!

ரியாத்:புனிதநகரங்களான மெக்கா, மெதினாவுக்கு கத்தார் மக்கள் வரலாம் என்று சவுதிஅரேபியா தெரிவித்துள்ளது.

உலகெங்கும் உள்ள முஸ்லிம் மக்கள் புனிதநகரங்களுக்கு வருகைதந்து உம்ரா எனப்படும் கடமைகளை செய்வது வழக்கம்.
வளைகுடா கூட்டமைப்பில் இருந்து கத்தார் விலக்கிவைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கத்தார் மக்கள் சவுதியில் உள்ள புனிதநகரங்களுக்கு சென்று உம்ரா செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், சவுதிஅரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கத்தார் மக்கள் உம்ரா செய்வதற்கு வரவேற்கப்படுகிறார்கள். இதற்காக அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து விசா பெறவேண்டும்.கத்தார் விமானங்களை தவிர்த்து வேறெந்த விமானங்களிலும் சவுதி வரலாம். அவர்களுக்கு உரிய வசதிகள் செய்துதரப்படும். ரம்ஜான் வரை கடைசி பத்துநாட்களுக்கு உம்ரா செய்ய கத்தார் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here