ஓடும் பேருந்தில் நெஞ்சுவலி! 50 பயணிகள் உயிரை காப்பாற்றி டிரைவர் மரணம்!!

சென்னை: அருணாசலம் திருவள்ளூரின் பள்ளிபட்டு அருகே கரிம்பேடு கிராமத்தை சேர்ந்தவர். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு விஷால் (9), நிவாஸ் (7) இரு மகன்கள் உள்ளனர்.கடந்த 15 ஆண்டுளாக ஆந்திரா போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை திருமலையிலிருந்து பேருந்தை ஓட்டி வந்துள்ளார். மீண்டும் இரவு திருமலைக்கு பேருந்தை இயக்கியுள்ளார்.பேருந்து செங்குன்றம் அருகே செல்லும்போது அருணாசலத்திற்கு மார்பில் வலி ஏற்பட்டுள்ளது. மெடிக்கல் ஷாப்பில் மருந்துகள் வாங்கி சாப்பிட்டுள்ளார். நெஞ்சுவலி அதிகரித்ததையடுத்து பேருந்தை நிறுத்தி விட்டு ஸ்டீரியங் மீது சாய்ந்துள்ளார்.ஓட்டுனர் இருக்கையிலேயே டிரைவரின் உயிர் பிரிந்துள்ளது. நெஞ்சுவலியில் பேருந்தை ஓரமாக நிறுத்தியதால் பயணிகளின் உயிர் காப்பாற்ப்பட்டுள்ளது. இச்சம்பவம் பயணிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here