வீட்டுக்கடன் வட்டி உயரும்?!

மும்பை: வங்கிகளுக்கு இடையேயான வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டியும் உயர வாய்ப்புள்ளது.நாட்டின் நிதிநிலை தொடர்பாக ஆராய்ந்து வங்கிகளுக்கு இடையே நடைபெறும் பணப்பரிமாற்றத்துக்கான வட்டிவிகிதம்(ரெப்போரேட்) நிர்ணயிக்கப்படுகிறது.
2மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிடுகிறது.
மும்பையில் இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி கூட்டத்தில் ரெப்போரேட் தொடர்பாக அறிவிக்கப்பட்டது.ரெப்போரேட் 0.25% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரெப்போரேட் 6.25% என்றளவில் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலையேற்றம், பணவீக்கம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் இந்நடவடிக்கையால் வங்கிகள் வழங்கும் பல்வேறு கடனுக்கான வட்டிவிகிதம் அதிகரிக்கும்.
அதேபோன்று கடனை திருப்பிச்செலுத்தும் தவணைக்கால அளவும் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here