பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தயார்! சி.வி.சண்முகம் அறிவிப்பு!!

சென்னை: தமிமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ ஆக உள்ளார். நேற்று சட்டப்பேரவை கூட்டத்தில் பேசும்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறையில் நோயால் கஷ்டப்படும் 2 இஸ்லாமிய கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பேசினார்.சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அதற்கு விளக்கமளித்தார். பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு
எந்த தயக்கமும் இல்லை.அவர்களை விடுதலை செய்ய உச்சநீதி மன்றத்தின் கையில்தான் அதிகாரம் உள்ளது. உச்சநீதி மன்றம் அனுமதியளித்தால் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் மாநில அரசு விடுதலை செய்யும்.நோய் பாதிப்பு ஏற்பட்டு கஷ்டப்படும் 2 இஸ்லாமிய கைதிகளும் இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here