தந்தையை சுட்டுகொன்ற காவலர்! குடிபோதையில் வெறிச்செயல்!!

தேனி: பெரியகுளத்தை சேர்ந்தவர் விக்னேஷ் பிரபு தேனி ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். நீதிபதி ஒருவரின் பாதுகாப்பு பணிக்காக காவலர் விக்னேஷ் பிரபிவுக்கு எஸ்எல்ஆர் துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது.பணி முடிந்து துப்பாக்கியை போலீசில் ஒப்படைக்காமல் துப்பாக்கியுடன் வடுகப்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு ஓய்வுக்காக சென்றுள்ளார். வீட்டில் மதுகுடித்துவிட்டு போதையில் இருந்துள்ளார்.
கூலித் தொழிலாளியான அவரது தந்தை செல்வராஜ் அதை கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த காவலர் விக்னேஷ் துப்பாக்கியால் தந்தையை சுட்டுக்கொன்றார்.
தகவலறிந்து வந்த வடுகப்பட்டி போலீசார் காவலர் விக்னேஷ் பிரபுவுவை கைது செய்தனர். இதைதொடர்ந்து தேனி எஸ்பி பாஸ்கரன் விசாரணை செய்தார். விசாரணயில் விக்னேஷ் பிரபுவிடம் இருந்த மேலும் இரண்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here