அனாதை குழந்தைக்கு தாய்பால்! பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு!!

பெங்களூர்: பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே கட்டப்பட்டு வரும் கட்டிடப்பகுதியில் பிளாஸ்டிக் பையில் குழந்தை ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு சென்ற உதவி சப்-இன்ஸ்பென்டர் நாகேஷ் பிளாஷ்டிக் பையை பார்த்தபோது குழந்தையை ரத்த காயங்களுடன் உயிருடன் இருந்தது.
உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சென்று சிகிக்சை அளித்தார். குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தார்.
போலீஸ் நிலையத்தில் குழந்தை பசியால் அழுதது. அப்போது அங்கு பணியாற்றிய கான்ஸ்டபுள் அர்ச்சனா குழந்தைக்கு தாய்பால் கொடுத்து குழந்தையின் பசியை போக்கினார். கான்ஸ்டபுள் அர்ச்சனா குழந்தை பெற்று 3 மாத பேருகால விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பி இருந்தார்.
தனது குழந்தை அழுவது போல் உள்ளது என அக்குழந்தைக்கு தாய்பால் கொடுத்து பசியை போக்கியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அக்குழந்தைக்கு குமாரசாமி என பெயரிட்டு குழந்தை நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். அனாதை குழந்தைக்கு பால் கொடுத்து பசியை போக்கிய பெண் போலீஸ் அர்ச்சனாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here