ஓட்டலில் சாப்பிடவந்தவர் செல்போன் வெடித்தது!

மும்பை:ஓட்டலில் சாப்பிடவந்தவரின் செல்போன் திடீர் என்று வெடித்தது.
மும்பை பந்துப் பகுதியில் பிரபல ஓட்டல் இயங்கிவருகிறது.அந்த ஓட்டலில் ஜூன்4ம் தேதி சாப்பிட ஒருவர் வந்தார்.
அவர் சட்டைப்பையில் செல்போன் வைத்திருந்தார்.

செல்போனை சார்ஜ் செய்து சில நிமிடங்களுக்கு முன்னர் தான் எடுத்திருந்தார்.
ஏசி ஓட்டலான அந்த ஓட்டலுக்கு வந்து உணவு வகைகளை ஆர்டர் செய்தார்.
சாப்பிடத்தயாரான போது செல்போன் திடீரென்று வெடித்தது.அதில் அவர் தாடை, மார்பகம் ஆகிய பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன.
கடந்த இரு தினங்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்ற அவர் இன்று வீடு திரும்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here