மோடிக்கு எதிராக சர்வதேச சதி!

மங்களூர்:பிரதமருக்கு எதிராக சர்வதேச அளவில் சதி நடைபெற்றுவருவதாக பாஜக எம்.எல்.ஏ. ரவி திடுக் தகவலை வெளியிட்டுள்ளார்.மங்களூரில் அவரளித்த பேட்டி:`நாடு முழுவதும் கருத்து வேறுபாடுகொண்ட கட்சிகளை மோடி அலை ஒன்றுசேர்த்திருக்கிறது.
பிரதமர் மோடியைக் கண்டு அஞ்சும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள், அவர் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைய வேண்டும் என விரும்புகின்றன.மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று மோடி, மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, மிகப்பெரிய சதி நடக்கிறது.
பிரதமர் பதவியில் மீண்டும் மோடி அமர்ந்தால், ஒரு தலைவராக அவரது வலிமை மேலும் அதிகரித்துவிடும் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.நாட்டை வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டுவரும் பிரதமர் மோடிக்கு, வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மக்கள் நிச்சயம் ஆதரவு அளிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here