பெற்ற மகள் பணயம்! முதலாளி மகனை காப்பாற்றிய தொழிலாளி!!

விருதுநகர்: சண்முகக்கனியின் பருப்பு ஆலையில் கூலி வேலை பார்த்து வருபவர் ராஜ்திலக். ராஜ்திலக்கை இருசக்கர வாகனத்தில் கத்திமுனையில் கடத்தி கும்பல், சண்முகக்கனியின் 5 வயது மகனை ராஜ்திலக் அழைத்து வர வேண்டும். அது வரை ராஜ்திலக்கின் ஒன்றரை வயது மகளை பிணையமாக தங்களிடம் விட்டு செல்ல வேண்டும் என்று அக்கும்பல் கூறியுள்ளது.மனைவியிடம் செல்போனில் மகளை இரு சக்கர வாகனத்தில் வரும் இருவரிடம் கொடுத்தனுப்புமாறு கூறியிருக்கிறார் ராஜ்திலக். இதையடுத்து ராஜ்திலக்கின் குழந்தையை கொண்டு வந்த கொள்ளை கும்பல் சண்முகக்கனியின் மகனை கூட்டி வந்தபின் ராஜ்திலக்கையும் அவரது குழந்தையையும் விடுவிப்பதாக கூறியிருக்கின்றனர்.ஒன்றரை வயது குழந்தையை கத்திமுனையில் விட்டு விட்டு அங்கிருந்த கிளம்பிய ராஜ்திலக் நீண்ட யோசனைக்குப்பின் விருது நகர் கிழக்கு காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்திருக்கிறார். விரைந்த காவல்துறையினர் ராஜ்திலக் குழந்தையை மீட்டு ராஜ்திலக்கிடம் கொடுத்தனர்.குழந்தையை வைத்திருந்தவர் பெயர் வெங்கடேஷ் என்றும் மற்றவர்கள் பெயர்கள் பிரபு மற்றும் அசோக் என்றும் அவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. தப்பியோடிய இருவரைத் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். சமயோசிதமாக நடந்த ராஜ்திலக்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here