காதலருடன் ஊர்சுற்ற செல்போன் திருட்டு! கல்லூரி மாணவிகள் கைது!!

மும்பை: மும்பையில் தனியார் கல்லூரியில் படித்து வருபவர்கள் டுவிங்கிள்சோனி(20), டினால்பார்மா(19). இவர்கள் கல்லூரிக்கு தினமும் புறநகர் ரயிலில் பயணம் செய்துவருவது வழக்கம்.சோனியும், டினாலும் தங்களுடன் படித்துவரும் மாணவர்களை காதலித்தனர்.
அவர்களுடன் ஜாலியாக ஊர்சுற்ற பணம் தேவைப்பட்டது.இதற்காக ரயிலில் பயணம் செய்வோரிடம் இருந்து மொபைல்போன்களை திருடி காதலர்களிடம் இருவரும் கொடுப்பது வழக்கம். அவர்கள் கள்ளச்சந்தையில் போன்களை விற்று பணம் சம்பாதித்தனர்.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சோனி பெண் ஒருவரிடம் செல்போனை திருடும்போது கையும் களவுமாக பிடிபட்டார். ரயில்வே போலீசார் அவரை விசாரித்தனர். அவரது கைப்பையில் 4போன்களும் 20சிம்கார்டுகளும் சிக்கின.
சோனி உண்மையை ஒப்புக்கொண்டதால் கைதுசெய்யப்பட்டார்.டினால் பார்மாவையும் போலீசார் கைதுசெய்தனர். இப்பெண்களின் காதலர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். கடந்த 6மாதங்களில் இக்கும்பல் 30போன்களை திருடிவிற்று செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here