செல்பி மோகத்தால் மயிலை கொன்ற மக்கள்!

கொல்கத்தா:கிராம மக்களின் செல்பி மோகத்தால் தேசியப்பறவையான மயில் பரிதாபமாக இறந்தது.
மேற்குவங்காளத்தில் உள்ள ஜல்பைகுடி மாவட்டம் விவல்யைகுளி கிராமம் மலைப்பகுதியை ஒட்டியுள்ளது.மலையில் வசிக்கும் மயில்கள் உணவுதேடி அடிக்கடி கிராமத்துக்குள் வருவது வழக்கம்.
அவ்வாறு வந்த ஒரு மயிலை பிடித்த மக்கள் அதனுடன் செல்பி புகைப்படம் எடுக்க போட்டிபோட்டனர்.
மயிலின் இறகு, கால்களை பிடித்து இழுத்து துன்புறுத்தினர்.சிலர் மயிலின் கழுத்தைப்பிடித்து அழுத்தி படமெடுத்தனர். இதனால் மயில் பரிதாபமாக இறந்தது.
இதனைத்தொடர்ந்து மயிலை வனப்பகுதியில் புதைத்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தெரியவந்தது. அவர்கள் வழக்குப்பதிவுசெய்து மயிலுடன் படமெடுத்த இருவரை கைதுசெய்தனர். மற்றவர்களை தேடிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here