பெட்ரோல் விலை தினமும் உயர்வு!! பிரதமருக்கு 9பைசா காசோலை!

தெலங்கானா: பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்துவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 9காசு காசோலையை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார் ஒரு இளைஞர்.கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் மே 14-ம் தேதிவரை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. கர்நாடகாவில் தேர்தல் முடிந்தபின், தொடர்ந்து 15 நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின. இதனால், பெட்ரோல் ஒருலிட்டர் அதிகபட்சமாக ரூ.82க்கும், டீசல் ரூ.73க்கும் விற்பனையானது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலில் சில காசுகளை பெயரளவுக்குக் குறைத்து வருகின்றன. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசலில் வெறும் ஒரு காசு மட்டும் குறைக்கப்பட்டது.

இதனால் மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது.இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ராஜன்னா சர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த சந்து கவுட் என்றஇளைஞர் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மோடிக்கு 9 காசு காசோலையை அனுப்பியுள்ளார்.

 

ராஜன்னா சிர்சில்லா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா பாஸ்கர் நேற்று பிரஜா வாணி திட்டத்தில் பஙகேற்று இருந்தார். அப்போது அங்கு வந்த சாந்து கவுட், தன்னிடம் இருந்த 9 காசுக்கான காசோலையை பிரதமர் நிவாரண நிதியில் சேர்த்துவிடுமாறு கூறி அதை ஆட்சியரிடம் அளித்தார். மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண பாஸ்கர் அதைப் பெற்றுக்கொண்டு அந்த இளைஞரை அனுப்பிவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here