புது ஷோரூம் தொடங்கி கொள்ளையடித்த பொருட்களை விற்பனை!

சென்னை: சென்னை மயிலாப்பூர் உட்பட பல இடங்களில் ஒரே பாணியில் கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இது குறித்து 17 காவல் நிலையங்களில் 31 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. சென்னை மாநகர காவல் ஆணையர் தலைமையில் போலீசார் தீவிர
முயற்சியில் ஈடுப்பட்டனர்.கண்காணிப்பு கேமாராவின் பதிவுகளை ஆய்வு செய்தனர். கருப்பு நிற கார் ஒன்று கொள்ளை சம்பவங்களில் தொடர்ச்சியாக பதிவாகியிருந்தது தெரிந்தது.ராயப்பேட்டையில் சந்தேகத்திற்கு உரிய காரை நிறுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சையது சர்பிராஸ் நவாஸ்வா, முகமது ஜெரின், ராஜா என்பது தெரியவந்தது.கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களை விற்க தனி ஷோரூம் திறந்து விற்பனை செய்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here