நாடாளுமன்றத்தை சுத்தம்செய்த பிரதமர்!

நெதர்லாந்து:நாடாளுமன்றத்தை சுத்தம் செய்த நெதர்லாந்து பிரதமர் விடியோ வைரலாக அதிகம் பார்க்க, பகிரப்படுகிறது.பிரதமர் மார்க்ருட்டே, நாடாளுமன்ற உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு கையில் கோப்பையுடன் தனது அறைக்கு வந்து கொண்டிருந்தார்.
பாதுகாப்பு கண்ணாடி தடுப்பில் அவர் கை பட்டதில் காபிகோப்பை விழுந்து காபி தரையில் கொட்டியது.

அதனை துடைப்பதற்காக மாப்-உடன் பணியாளர் வந்தார்.
அவரிடமிருந்து மாபை வாங்கிய பிரதமர் தானே தரையை சுத்தம் செய்தார்.
தரைத்தடுப்பின் ஓரங்களில் ஒட்டியிருந்த காபியை குனிந்து துடைத்தார்.
பிரதமரின் உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அங்கு கூடி பிரதமரின் பணிக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.மாபை சரிவர இயக்கத்தெரியாமல் திணறிய பிரதமருக்கு இயக்குவது எப்படி என்று நாடாளுமன்ற துப்புரவு பணியாளர்கள் கற்றுத்தந்தனர்.
அவர்களிடம் அதனை திருப்பித்தந்து மகிழ்ச்சியுடன் விடைபெற்றார் பிரதமர் மார்க்ருட்டே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here