கருணைக்கொலை செய்ய திருநங்கைகள் மனு!

ஈரோடு: திருநங்கைகளான ஓவியா, அனு ஈரோடு வீரப்பன்சத்திரம் சின்னவலசு பகுதியை சேர்ந்தவர்கள். ஈரோடு ஆட்சியர் எஸ்.பிராபகரிடம் தங்களை கருணைக்கொலை செய்யுமாறு மனு கொடுத்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியது. போலீசார் எங்களை பாலியல் தொழில் செய்வதாக கூறி எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்கின்றனர். உண்மையில் பாலியல் தொழில் செய்பவர்களை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை.நாங்கள் கடை கடையாக சென்று அவர்கள் தரும் பணத்தில் பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்கள் மீது திருட்டு குற்றம் சுமத்தி அவதூறு பரப்பி வருகின்றர். இதனால் எங்களுக்கு யாரும் வேலை தராத நிலை ஏற்பட்டுள்ளது.தினம் செத்து செத்து பிழைப்பதை விட எங்களை கருணைக்கொலை செய்து விடுமாறு மனு அளித்துள்ளோம் என்று திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here