காலா படத்துக்கு திரைபோட்டார் குமாரசாமி!

பெங்களூர்:காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க முடியாது என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.ரஜினிகாந்த் நடித்துள்ள காலா 7ம் தேதி ரிலீசாகிறது. கர்நாடக தியேட்டர் அதிபர்கள் இப்படத்தை திரையிட மறுத்துவிட்டனர். இதனால், காலா தரப்பு நீதிமன்றத்தை அணுகியது. காலா திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம், இதுதொடர்பாக திரையரங்குகள் குறித்த விபரத்தை காவல்துறைக்கு தெரிவித்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளலாம் என்று  காலா தயாரிப்பாளருக்கு தெரிவித்துவிட்டது.இதற்கிடையே, கர்நாடகா திரைப்பட வர்த்தகசபையின முதல்வர் குமாரசாமியை இன்று சந்தித்தனர்.  காலா திரையிடுவது குறித்து அவர்கள் ஆலோசித்தனர். பின்னர் குமாரசாமி அளித்த பேட்டியில், சினிமா தொழிலில் எனக்கும் தொடர்பு உள்ளது.சினிமா தயாரிப்பு, விநியோகத்தில் அனுபவம் உள்ளவன். ஆனால், ஒரு கன்னடராக இந்த விஷயத்தை ஆலோசிக்க வேண்டி உள்ளது.  இது உணர்ச்சிகரமான ஒரு பிரச்சனை. இப்போதைய சூழ்நிலையில் காலாவுக்கு அனுமதி அளிப்பது பொருத்தமானதாக இருக்காது. 2016ல் கன்னட திரைப்படமான நாகவாரா(ராஜநாகம்) திரைப்படம் நடிகர் விஷ்ணுவர்த்தன் நடிப்பில் வெளியானது. அப்படத்தை வெளியிட தமிழகத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டினார் முதல்வர் குமாரசாமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here