காலாவை காப்பாற்றுவாரா தேவகவுடா!

பெங்களூர்: கர்நாடகாவில் காலா ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர் அதிபர்கள் மறுத்துள்ளனர்.இதுகுறித்து மாநில திரைப்பட வர்த்தகசபை கூட்டத்தில் அவர்கள் தெரிவித்துவிட்டனர்.இந்நிலையில், 7ம் தேதி வெளியாகும் காலாவுக்கு எந்த ஒரு தியேட்டரும் கிடைக்கவில்லை.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தியேட்டர் அதிபர்கள் தெரிவித்தனர்.

காலா தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று நடிகர் தனுஷ் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், காலா வெளியாகும் தியேட்டர் பட்டியலை காவல்துறை, அரசிடம் கொடுத்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளது.இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இவ்விவகாரம் குறித்து கூறுகையில், அரசியலையும், தொழிலையும் பிரித்துப்பார்க்க வேண்டும். இங்கு ஒன்றாக பார்ப்பதால் பிரச்சனை ஏற்படுகிறது. காலா படத்தால் கர்நாடகாவில் பிரச்சனை வராது என நினைக்கிறேன்.கர்நாடகாவில் தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் அப்படத்தை ரசிக்க விரும்புகின்றனர். திரைப்படம் வெளியிட முதல்வர் குமாரசாமி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். படத்தை தடைசெய்ய தேவகவுடா (குமாரசாமியின் தந்தை) விடமாட்டார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here