கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு! எம்.எல்.ஏ.க்கள் தீக்குளிக்க முயற்சி!!

மகாராஷ்டிரா: விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.
இப்பரபரப்பு சம்பவம் நடந்தது மகாராஷ்டிரா மாநிலத்தில்.அமராவதி மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய பணப்பயிராக உள்ளது கொண்டைக்கடலை.
இந்த ஆண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இருந்தபோதும் அரசு கொள்முதல் மையங்கள் இன்னமும் திறக்கப்படவில்லை.
இதுதொடர்பாக மாவட்ட் நிர்வாகத்தை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள், பேரணி நடந்தும் பயனில்லை.

இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வீரேந்திர ஜாக்தாப், யாஷ்மோமதி தாக்கூர் ஆகிய இருவரும் விவசாயிகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
விவசாயிகளுடன் சேர்ந்து தீக்குளிக்க முயன்றனர்.
இதனைத்தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. போலீசார் இரு எம்.எல்.ஏக்களையும் கைது செய்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here