தூத்துக்குடி போராட்டம், நானும் சமூக விரோதிதான்! கமல் பேட்டி!!

சென்னை: மக்கள் நீதி மையம் கமல்ஹாசன் கர்நாடகா முதல்வர் குமாரசாமியை பார்க்க பெங்களூர் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.கர்நாடக முதல்வருடன் நேரில் சந்தித்து பேச வேண்டியுள்ளது. அதற்காகவே பெங்களூரு செல்கிறேன். காவிரியில் தண்ணீர் விட வலியுறுத்தும் பலம் என்னிடம் இல்லை.காவிரி விஷயத்தில் அரசியல் வேண்டாம் என்பதே என்னுடை கருத்து. காலா திரைப்படம் குறித்து வியாபாரிகள் பார்த்து கொள்வார்கள்.தூத்துக்குடியில் போராடியவர்கள் சமூக விரோதிகள் கிடையாது. அப்படியெனில் தானும் சமூக விரோதிதான். தூத்துக்குடி போராட்டம் நல்ல பாதை. வன்முறை இருந்தால் குறைத்துக் கொள்ள வேண்டும். போராட்டத்தை நிறுத்தக்கூடாது என கமல் கூறியுள்ளார். தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்பி கொண்டிருக்கும் நிலையில் கமல் இவ்வாறு பேட்டியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here