ரஜினி-கமல் அரசியல் போட்டி ஆரம்பம்!

சென்னை: அரசியலில் கமல், ரஜினி இருவரும் தனி வழி கண்டபோதும் ஒருவரை ஒருவர் நேரடியாக விமர்சித்தது இல்லை. ரஜினியின் தூத்துக்குடி சறுக்கலுக்குப்பின்னர் கமலின்பேட்டி ரஜினியை காயப்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் போராட்டம் நடத்துவோர் சமூகவிரோதி என்றால் நானும் சமூகவிரோதிதான் என்று கூறியிருந்தார் கமல்.இந்நிலையில், ரஜினியின் அரசியல் ஆலோசகர் தமிழருவி மணியன் விடுத்துள்ள அறிக்கையில் கமலை கண்டித்துள்ளார். மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்துவருகிறார் ரஜினிகாந்த். அவரை மக்கள் போராட்டத்திற்கு எதிரானவர் என்ற சித்திரத்தை கமல் உருவாக்குகிறார். ரஜினி போராட்டத்துக்கு எதிரியல்ல.வாழ்வாதாரப்போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம்பெறக்கூடாது என்பது ரஜினியின் கவலை. ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்வர் கனவு கலைந்துவிடக் கூடும் என்று அச்சத்தில் சில தலைவர்களும், சில  அமைப்புகளும் உள்ளன. அவருடைய பிம்பத்தைத் திட்டமிட்டுச் சிதைக்க அவர்கள் முற்படும் நேரத்தில், கமல்ஹாசனும் மறைமுகமாக அவர்களுக்கு உதவிக்கரம்
நீட்டுகிறார். அவரின் அந்தரங்க நோக்கத்தை மக்கள் எளிதாக இனம்காணக் கூடும்.‘காந்தியின் சீடர்’ என்று அடிக்கடி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கமல்ஹாசன், பெரிய தொழில்கள் காந்தியின் கனவு என்கிறார். காந்தி, பெருந்தொழில்களுக்கு எதிராகவே இறுதிவரை போராடினார்.கமல்ஹாசன், இனியாவது காந்தியப் பொருளாதாரம் குறித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது. சமூக வலைதளங்களிலும், சில காட்சி ஊடகங்களிலும் ரஜினிக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன்பிடிக்கப் பார்ப்பது வருந்தத்தக்கது. இவ்வாறு தனது அறிக்கையில் தமிழருவிமணியன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here