ஓடும்ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம்! டிக்கெட் பரிசோதகர் கைது!!

சென்னை: ஓடும் ரயிலில் 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த டிக்கெட் பரிசோதகர் கைதானார்.
கோவைக்கு சுற்றுலா சென்றுவிட்டு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 6வயது சிறுமி குடும்பத்தினருடன் சென்னை வந்துகொண்டிருந்தனர்.

போத்தனூரை சேர்ந்த அனிஷ்குமார்(26) என்ற பரிசோதகர் பயணிகளின் டிக்கெட்டுகளை சரிபார்த்தார்.ரயில் ஜோலார்பேட்டைக்கு வந்துகொண்டிருந்தபோது அச்சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதனால் அச்சிறுமி சத்தம்போடவே, குடும்பத்தினர் எழுந்து அனிஷ்குமாரை பிடித்தனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனீஷ்குமாரை கைதுசெய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here