கர்ப்பிணி மனைவி கொலை! கணவன் வெறிச்செயல்!!

புதுடெல்லி: உமேஷ்குப்தா டெல்லியை சேர்ந்தவர். இவரின் மனைவி ஜோதி. இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. ஜோதி மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.குடிப்பழக்கம் அடிமையான உமேசுக்கும் அவரது மனைவிக்கும் பண விஷயமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது.இதில் ஆத்திரம் அடைந்த உமேஷ் கர்ப்பிணிப்பெண் எனவும் பாராமல் கழுத்தை நெறித்து துடிதுடிக்க கொன்றுள்ளார். தானம் கையை அறுத்து கொண்ட நிலையில் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்துக் கொண்டிருந்த குழந்தை ஏதுவும் புரியாமல்
அழுதவாறு இருந்துள்ளது.குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு வந்தவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஜோதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். உமேசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here