கர்நாடகாவில் ’காலா’! நடிகர்கள் மோதல்!!

பெங்களூர்:ரஜினியின் புதிய படமான காலா கர்நாடகாவில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தியேட்டர் அதிபர்கள் காலாவை திரையிடமுடியாது என தெரிவித்துள்ளனர்.
திரைப்பட வர்த்தக சபையும் கைவிரித்துவிட்டது.
இந்நிலையில், காவிரியில் நீர்திறக்க வலியுறுத்தி கர்நாடக முதல்வரை சந்தித்தார் நடிகர் கமல்.பின்னர் அவரளித்த பேட்டியில் காலா குறித்து கேட்கப்பட்டது.
காலா பற்றி கர்நாடக முதல்வரிடம் பேசுவது தேவையற்றது. அதுபற்றி பேசவும் இல்லை. என்னை கேட்டால் திரைப்படத்தைவிட மக்கள் பிரச்சனை தான் முக்கியம்” என்றார் கமல்.காலா திரையிட மறுப்பது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ள கருத்து:
நடிகர் ரஜினிகாந்த் காவிரி விவகாரத்தில் கூறிய கருத்து கன்னட மக்களை வெகுவாக பாதித்துள்ளது.
இதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிக்கொண்டு, ‘காலா’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் விருப்பத்துக்கு எதிரானது.குறிப்பிட்ட சிலர் கர்நாடகத்தில் எந்த படத்தை திரையிடலாம் அல்லது எந்த படத்தை திரையிடக்கூடாது என முடிவு செய்வது தவறான செயலாகும்.
இந்த முடிவு படத்தை தயாரித்தவர் அல்லது அந்த படத்தில் நடித்திருப்பவர்களை மட்டுமே பாதிக்கும்.
அதை கடந்து வேறு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.எனவே ‘காலா’ படத்தை கன்னட மக்களிடம் விட்டுவிடுவோம்.
அந்த திரைப்படத்தை பார்ப்பதா? வேண்டாமா? என்பதை அவர்கள் முடிவு செய்துகொள்ளட்டும். இந்த விவகாரத்தில் இதுவே எனது கருத்து என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here