உரிமைக்காக போராட மக்களுக்கு தடையில்லை!

சென்னை: தமிழக சட்டப்பேரவயில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக இன்று விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,”ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.தாமிர உருக்காலைகள் தமிழகத்திற்கு வேண்டவே வேண்டாம் என்றும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான நிதியை 1கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்” என்றார்.பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை சட்டவல்லுநர் குழு ஆலோசனைப்படி வெளியானது. இனியார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது. ஆலைக்குக் கொடுத்த அனைத்து உரிமைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே மக்கள் மீண்டும் போராட வேண்டாம்.
ஆனால் மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுவதற்கு எந்த தடையும் இல்லை. நாட்டிலேயே அதிக அளவில் போராட்டங்கள் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது”. “ஸ்டெர்லைட் போராட்டத்தில் கையில் உருட்டுக் கட்டைகள், பெட்ரோல் குண்டுகளுடன் வந்தவர்கள் என்ன பொதுமக்களா” எனக்கேட்ட அவர், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று விளக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here