பக்கோடா கடை திறக்கவே மத்திய அரசு உதவுகிறது?!

மும்பை: மத்திய அரசின் கடனுதவியைக்கொண்டு இளைஞர்கள் பக்கோடா கடைதான் வைக்கமுடியுமென்றார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.தானே நகரில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தனியார் முதலீடு, தனியார் நிறுவனங்கள் நுகர்வு, ஏற்றுமதி, அரசின் செலவினங்கள் ஆகியவை 4 இயந்திரங்களும் முக்கியமானவை.
இவை நான்கும் ஒரு காரின் 4 டயர்களைப் போன்றவை.
இதில் ஒரு டயர் அல்லது இரு டயர்கள் பஞ்சரானால் பொருளாதார வளர்ச்சி குறைந்து சரிந்துவிடும்.
பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தின் 3 டயர்களும் பஞ்சரான நிலையில் இருக்கிறது.அரசு சுகாதாரதிட்டங்களுக்கு அதிகமாக செலவிடுகிறது. மறுபுறம் பெட்ரோ, டீசல், காஸ் வரிவிதிக்கப்படுகிறது.
மக்களை வரியால் கசக்கிப்பிழிந்து அதனை சுகாதாரத்துக்கு செலவுசெய்கிறது.

நாட்டில் உள்ள மிகப்பெரிய 10 நிறுவனங்கள் திவாலானதாக தெரிவித்துள்ளன. அவற்றில் 5 நிறுவனங்கள் உருக்கு நிறுவனங்கள்.பணம்வாபஸ் திட்டத்தை தொடர்ந்து ஜிஎஸ்டி வரியைப் புகுத்தி மக்களைத் துன்பத்துக்கு ஆளாக்கினார்கள்.
ஜிஎஸ்டி வரி என்பது ஒற்றை வரி கொண்டமுறையாகும். ஆனால், நடப்பிலிருந்த 2வரிமுறைக்கு பதில் தற்போது 5வகை வரிகள் உள்ளன. எனவே ஜிஎஸ்டி-யால் என்ன பலன்.முத்ரா திட்டத்தின் கீழ் பணம் பெற்றவரையும், பணத்தின் மதிப்பையும் கணக்கிட்டால், ஒருவர் சராசரியாக ரூ.43ஆயிரம் பெற்றுள்ளார். மிகச்சொற்பமான இத்தொகையை கொண்டு பக்கோடா கடைதான் வைக்கமுடியும்.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here