நீட் ரிசல்ட் வெளியீடு! தமிழக மாணவி 12ம் இடம்!!

சென்னை: நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா தேசிய அளவில் 12ம் இடம் பிடித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நாடுமுழுவதும் ஒரே நுழைவுத்தீர்வு ‘நீட்’அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
13லட்சம் பேர் நாடு முழுவதும் இத்தேர்வு எழுதினர். தமிழகத்தில் 1.14லட்சம் பேரும், தமிழில் இத்தேர்வை 24ஆயிரத்து 720பேரும் எழுதினர். அவர்களில் மிகக்குறைந்த அளவாக 1.86%பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் அதிகளவாக 76,778மாணவ மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.இத்தேர்வில் பிகார் மாநிலத்தை சேர்ந்த கல்பனா 720க்கு 691மார்க் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா 676மார்க் பெற்று 12ம் இடம்பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here