கர்நாடகமுதல்வர் – கமல் சந்திப்பு! புதிய அரசியல் அத்தியாயம் உதயம்!!

பெங்களூர்:பெங்களூரில் கர்நாடக முதல்வரை சந்தித்தபின் கமல் அளித்தபேட்டி:
கர்நாடகமுதல்வரை சந்தித்தேன். கலைஞனாக, மக்கள்நீதிமய்யம் அரசியல்கட்சி தலைவராக அல்ல. மக்கள் பிரதிநிதியாக சந்தித்தேன். குறுவை பயிரிடும் நேரம் வந்துவிட்டது. அதற்கான நீர் விடுவிப்பதற்காக கோரிக்கை விடுத்தேன்.அரசியலை விட விவசாயிகளின் தேவைகளை முன்வைத்தேன். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் அதன்படி நடக்கவேண்டிய கடமை இருவருக்குமே உள்ளது. அவர் பெருந்தன்மையுடன் பேசினார். இது ஒரு நீண்ட நல்லுறவின் துவக்கப்புள்ளியாக இருக்கும். அரசியல் கூட்டணி குறித்த பேச்சாக இல்லை.மக்களின் நல்லுறவுகுறித்த பேச்சாக இருந்தது.முன்னதாக பேசிய கர்நாடகமுதல்வர் குமாரசாமி, கர்நாடகமக்களும், தமிழக மக்களும் சகோதர சகோதரிகள். அந்தப்பார்வையில் காவிரி நீர் பகிர்வுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.நமது விவசாயிகள், தமிழக விவசாயிகள் பிரச்சனைகளை கருத்தில்கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கும். காவிரி பிரச்சனை நேற்று, நேற்றுமுந்தினம் உள்ள பிரச்சனை அல்ல. அப்பிரச்சனை நூறாண்டுகளாக தொடர்ந்து வருகிறது.எங்கள் காலத்தில் காவிரி பிரச்சனை மட்டுமல்ல. நாட்டில் தீர்க்கப்படவேண்டிய பல பிரச்சனைகளுக்கும் பேசி தீர்வுகாண்போம். கமலஹாசனுடனான சந்திப்பு புதிய அரசியல் அத்தியாயத்தை துவக்கியுள்ளது. இவ்வாறு குமாரசாமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here