ஜார்கண்டில் சோகம்! பட்டினியால் பெண் சாவு!

ஜார்கண்ட்: ரேஷன்கார்டு வேண்டி நடையாய் நடந்த பெண் இறுதியில் பட்டினியால் உயிரிழந்தார்.
ஜார்கண்ட் மாநிலம் கிரிதி பகுதியை சேர்ந்தவர் சாவித்ரிதேவி(58). பலவீடுகளில் வேலைபார்த்து வாழ்ந்துவந்தார்.இவருக்கு புதிய ரேஷன்கார்டு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அதிகாரிகள் கேட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய சாவித்திரிதேவியால் முடியவில்லை.
இதனால் நுகர்பொருள் விநியோக அலுவலகத்துக்கு நடையாய் நடந்தும் பலனில்லை.

 

இறுதியில் 3நாட்கள் உணவின்றி பட்டினி கிடந்த அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து கிரிதி தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன்நாத் மாத்தோ, “இது மிகப்பெரிய கவலையளிக்கக் கூடிய சம்பவமாகும். சட்டப்பேரவையில் எழுப்புவேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here