வரதட்சணைக்காக கர்ப்பிணியை கட்டி வைத்து கொடுமை!

டெல்லி: வரதட்சணைக்காக கணவரும் மாமியாரும் கர்ப்பிணியான மருமகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். வரதட்சனை தராததினால் கொடுமையின் உச்சக்கட்டமாக 5மாத கர்ப்பிணியை பூட்டிய தொழிற்சாலைியல் கை, கால்களை கட்டி அடைத்து வைத்துள்ளனர்.மருமகளின் பெற்றோரிடம் கர்ப்பிணியை காணவில்லை என தெரிவித்துள்ளனர்.சந்தேகமடைந்த பெண்ணின் பெற்றோர்கள் போலீசில் இதுகுறித்து புகார் செய்துள்ளனர். புகரையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் இருட்டு அறையில் கட்டி போட்டுள்ளதை கண்டுபிடித்தனர். கர்ப்பிணி பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மாமியாரை கைது செய்து தப்பியோடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here