கொள்ளுப்பேத்தி பாடலை ரசிக்கும் கருணாநிதி!

சென்னை: கருணாநிதியின் 95வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி, முதல்வர் மம்தா, அமைச்சர் ஜெயக்குமார், கமல், ரஜினி மற்றும் முக்கியத்தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.ஓராண்டாக உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் கருணாநிதியிடம் குடும்பத்தினர் அனைவரும் ஆசிபெற்றனர். கருணாநிதி தொண்டர்களையும் சந்தித்து மகிழ்ந்தார்.அவரது பேத்திகளுடன் விளையாடினார். பேத்திகளில் ஒருவர் ‘ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்’ எனும் பாடலை பாடுகிறார். பாடி முடித்ததும் எப்படி பாடினேன் என்று அவர் கருணாநிதியிடம் கேட்க, அதற்கு அவரும் ‘ம்ம்ம்’ என பதிலளிக்கிறார்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here