கருப்புப்பணம் ரூ.24ஆயிரம் கோடி! பத்திரமாக பதுக்கியது அம்பலம்!!

ம் ரூ.24ஆயிரம் கோடி பாதுகாப்பாக பதுக்கப்பட்டுள்ள விபரம் தெரியவந்துள்ளது.
கருப்புப்பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நவம்பர் 2016ல் அறிவிக்கப்பட்டன.இதனைத்தொடர்ந்து மக்கள் தங்களிடமுள்ள நோட்டுக்களை, வங்கி, தபால் அலுவலகங்களில் செலுத்தி மாற்றிக்கொள்ள வசதிசெய்யப்பட்டது.
இத்திட்டத்தால் கருப்புப்பணம் கண்டுபிடிக்க இயலவில்லை. மக்கள் சோதனையை சந்தித்ததே மிச்சம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்நிலையில், பணம் வாபஸ் திட்டத்தை தொடர்ந்து 1.68லட்சம் வங்கி கணக்குகள் புதிதாக துவக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 73ஆயிரம் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.24ஆயிரம் கோடி என்று தெரியவந்துள்ளது.
மத்திய கூட்டுறவு விவகாரத்துறை அமைச்சகம் இதுதொடர்பாக புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது.போலி கம்பெனிகள் துவக்கி கருப்புப்பணம் இவ்வாறு பதுக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
அந்நிறுவனங்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here