தனிப்பெரும் அரபு சக்தியாக விளங்கும் கத்தார்!!

தோஹா:வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் தனிப்பெரும் வலிமையுடன் உலகநாடுகள் மத்தியில் வலம் வருகிறது.கடந்த 2017, ஜூன்5ம் தேதி கத்தார் வரலாற்றில் ஒரு கருப்பு தினம்.
வளைகுடா நாடுகள் கூட்டமைப்பில் இருந்து அந்நாடு விலக்கிவைக்கப்பட்டது.
சகோதர நாடுகளான அமீரகம், சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் ஆகியவையே அபாண்ட பழிசுமத்தின கத்தார் மீது. கத்தார் அரசு தீவிரவாதிகளுக்கு உதவிசெய்கிறது என்று கூறின.நேசமும், சகோதரத்துவமும், இறைப்பற்றும் உடைய எந்நாடும் இதுபோன்ற அபாண்ட பழியை எதிர்த்து கூக்குரல் விடுக்கும். பிறநாடுகளை தங்களுக்கு ஆதரவாக பேசவைக்கும். ஆனால், கத்தார் அரசர் ஷேக்தமீம் அமைதி காத்தார்.நாங்கள் எந்த ஒரு தீவிரவாத அமைப்புக்கும் உதவவில்லை. நீங்கள் தாராளமாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டுங்கள் என்று மட்டுமே கூறினார்.
2வாரங்களுக்குப்பின் 14நிபந்தனைகளை விதித்தன வளைகுடா கூட்டமைப்பு. ஆனால் ஒரு தேசத்தின் சுயாட்சி, இறையாண்மை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றை பறித்து இருளில் தள்ளுவதாக இருந்தன அந்நிபந்தனைகள்.
கத்தார் அரசர் இந்நிபந்தனைகளுக்கும் மவுனமாகவே மறுத்தார்.இப்பிரச்சனையில் சமாதானம் செய்ய ஆர்வமாக இருந்த அமெரிக்கா, குவைத் நாடுகளிடம் தங்கள் நிலையை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் அரசர் ஷேக்தமீம்.
ஆனால், ஓராண்டு கழிந்தபின்னரும் வளைகுடா நாடுகள் கத்தார் மீதான புகாருக்கு ஆதாரத்தை திரட்டமுடியவில்லை.கத்தார் அரசர் ஐ.நா.பொதுக்குழுவில் உரையாற்றிய போது அந்நாட்டு மக்கள் ஒவ்வொருவரது குரலாகவும் அது எதிரொலித்தது. மன்னர் தோஹா திரும்பும்போது அவரே வியக்கும்வண்ணம் விமானநிலையம் துவங்கி அரண்மனை வரை மக்கள் வரவேற்று அவரது கண்களை குளமாக்கினர்.கத்தார் விமானங்கள், கரன்சிகள், பொருட்களுக்கும் தடை விதித்தன சகோதரநாடுகள்.
இனி நமக்குநாமே என்று திட்டமிட்ட கத்தார் அரசு விவசாயம், கேஸ் உற்பத்தி ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தியது.
நாணயமதிப்பை தக்கவைப்பது, வளரும் நாடுகளில் இருந்து கொள்முதல் செய்வது, உள்நாட்டுபாதுகாப்பை பலப்படுத்துவது என்று கத்தார் அரசர் கடந்த ஓராண்டாக இரவும்பகலும் பாடுபட்டார்.அரபுநாடுகளில் அண்ணனாக இருக்க சவுதி அரேபியா விரும்பலாம்.
சகோதர நாடான கத்தாரை தட்டிக்கொடுத்து வளர்த்து சகோதரனின் இதயத்திலும், தோளிலும் இடம்பிடிக்க முடியும்.

ஆனால், பெரியண்ணன் நாடுகளுடன் சேர்ந்ததால் ஏற்பட்ட சகவாச தோஷம், அவர்களை பிரிவினையை நம்பவைத்துள்ளது.
இன்று கத்தாரில் வெற்றிச்சுடர் தெரிகிறது. அந்நாட்டு அரசரும், மக்களும் அறவழியில் தடைதாண்டி தங்கள் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here