ஆண்களுக்கும் 15 நாள் மகப்பேறு விடுப்பு! அரியானா முதல்வர் அறிவிப்பு!!

சண்டிகர்: அரியானா முதல்வர் மனோகர் லால் கல்வி, போலீஸ் உட்பட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அது குறித்து மனோகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.கல்வி, மின்துறை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக 13,000 வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.அரசு ஊழியர்கள், ஆண்களும் பெண்களை போல 15 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட உள்ளது. பெண்களுக்கான இடஒதுக்கீ காவல் துறையில் 11 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது.அரியானா மக்களின் வாழ்க்கை தரம், வாழ்க்கை முறையை மாற்றி மேம்படுத்த மாநில அரசு பணிகளை செய்து வருகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here