ரம்ஜான் மாதத்தில் துளிர்த்த மனிதநேயம்!! மகனை கொன்றவரை மன்னித்த பெண்!

மலப்புரம்: மகனை கொன்றவரை தூக்குத்தண்டனையில் இருந்து விடுவிக்க கோரியுள்ளார் கேரளமாநிலத்தை சேர்ந்த முஸ்லிம் பெண்மணி.மலப்புரத்தை சேர்ந்தவர் ஆயிஷா பீவி. இவரது மகன் ஆசிப். சவுதிஅரேபியாவில் உள்ள அல்ஹசா நகரில் பெட்ரோல் பங்க்கில் சூப்பர்வைசராக பணியாற்றினார்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த முகரம் அலியும் அவருடன் பணிபுரிந்தார்.
இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். 6ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிப்பின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்றார் முகரம் அலி.

அவருக்கு தூக்குத்தண்டனை விதித்தது சவுதி நீதிமன்றம். முகரம்அலியின் உடல்நலம் சரியில்லாததால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அவரது உடல்நலம், மனநலம் நன்றாக உள்ளதாக டாக்டர்கள் சான்று அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ரம்ஜானுக்குப்பின் அவருக்கு தண்டனை நிறைவேற்ற வாய்ப்புள்ளது.இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில் 3 குழந்தைகளுடன் வறுமையில் வாடும் முகரம் அலியின் மனைவி ராஸியா கேரளா வந்தார்.
மலப்புரத்தில் வசிக்கும் ஆயிஷாபீவியை சந்தித்தார். தனது கணவரை மன்னித்து அவரை தூக்குத்தண்டனையில் இருந்து காப்பாற்ற உதவுமாறு கோரினார்.இருவரும் கண்ணீர்மல்க ஒருவரை ஒருவர் தேற்றிக்கொண்டனர்.
தனது மகனை கொன்றவரை தான் மன்னித்துவிட்டதாகவும், அவரை உச்சபட்ச தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் ஆயிஷாபீவி சவுதி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ராஸியா குடும்பத்தினருக்கும் உதவிகள் செய்தார்.
சவுதியில் உள்ள கேரள முஸ்லிம் கலாச்சார மையம் உதவியுடன் இக்கடிதம் சவுதிநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here