செங்கல்பட்டு: இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காதலன் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த 27ம் தேதி பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அப்பெண் சென்னை அண்ணாநகரை சேர்ந்த பொக்கிஷமேரி என்பது தெரியவந்தது.
விசாரணையின் முடிவில் போலீசார், பொக்கிஷமேரியைக் கொலை செய்ததாக அப்பெண்ணின் காதலர் பாலா என்பவரையும், கொலை உதவியதாக அவரது நண்பர் சுகுமார் என்பவரையும் கைது செய்துள்ளனர்.

கடந்த 8 ஆண்டுகளாக பாலாவும், பொக்கிஷமேரியும் காதலித்து வந்துள்ளனர்.
பொக்கிஷமேரி திடீரென பேசுவதை தவிர்த்துவிட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் அவரை பாலா கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.
பாலா ஏற்கனவே திருமணம் ஆனவர். இதுதெரியவந்த பொக்கிஷமேரி 2ம் திருமணத்துக்கு மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.