அமைச்சர் சுஷ்மா சென்ற விமானம் திடீர் மாயம்!!

புதுடில்லி: வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்ற விமானம் திடீர் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய விமானப்படையின் ஐ.எப்.சி.,-31 விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் புறப்பட்டு சென்றது.மாலையில் விமானம் மொரிஷியஸ் வானெல்லையை அடைந்தது. அதன்பின், 4.44 மணி முதல் 4.58 மணி வரை 14 நிமிடங்களுக்கு தரை கட்டுப்பாட்டுடன் அந்த விமானத்திற்கு எவ்வித தொடர்பும் கிடைக்காமல் போனது.
இதனால் அனைத்து விமான நிலையங்கள், விமானப்படை தொடர்பு மையங்கள் உஷார்படுத்தப்பட்டன.

சிறிதுநேரத்தில் மொரிஷியஸ் நாட்டு கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கிடைத்தது.
அசாதாரண சூழல் நிலவுவதாக கருதி மொரிஷியசில் தரையிறங்க உள்ளதாக பைலட் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தெரிவித்தார். உடனடியாக விமானம் தரை இறங்க அனுமதிக்கப்பட்டது.                                                                        சிறிதுநேரத்தில் வானிலை சரியான பின் அவ்விமானம் பயணம் தொடர்ந்தது.
ப்ரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க அவ்விமானத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here