சங்கீதாபாலன் நெட்வொர்க்! போலீஸ் தீவிர விசாரணை!!

சென்னை:விபச்சார வழக்கில் டிவி நடிகை சங்கீதா பாலன் கைது செய்யப்பட்டார்.
சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் வாணிராணி சீரியலில் நடித்துவருபவர் சங்கீதாபாலன்.சென்னையை சேர்ந்த இவர் 1996ல் கருப்புரோஜா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.
தொடர்ந்து படவாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. எனவே, சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
அவள், செல்லமே, அன்னக்கொடியும் 5பெண்களும், பிள்ளைநிலா, வள்ளி என தொடர்ந்து டிவி நாடகங்களில் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது பிரபலமான வாணிராணியில் நடித்து வருகிறார்.

சென்னை புறநகர் பனையூரில் உள்ள தனியார் பங்களாவில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அங்கு 3நடிகைகள், 2பெண்கள், ஒரு புரோக்கர் கைதுசெய்யப்பட்டனர். இளம் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக நடிகை சங்கீதாபாலன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தனியார் ரிசார்ட் உரிமையாளர் மைக்கேல் வெளியூரில் உள்ளார். திங்கட்கிழமை அவர் சென்னைதிரும்புகிறார். அவரிடமும் விசாரணை நடத்தப்படும்.

சங்கீதாபாலன் நெட்வொர்க்கில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்குமொழிகளில் டிவி நாடகங்களில் நடித்து பிரபலமானவர்களும் உள்ளனர். சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களும் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் துருவிதுருவி விசாரித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here