Connect with us

Tamilnadu

விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி! போலீஸ்காரருக்கு குவியும் பாராட்டு!!

Published

on

சென்னை: சாலை விபத்தில் சுயநினைவை இழந்தவருக்கு முதலுதவி அளித்து போக்குவரத்து காவலர் காப்பாற்றினார்.   சென்னை எழும்பூர் ஆதித்தனார் ரவுண்டானவில் போக்குவரத்து காவலர் சிவக்குமார் வாகனங்கன போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார்.  அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவர்  முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானார்.

இதில்  நிலைதடுமாறி இருசக்கர ஓட்டுனர் கீழே விழுந்ததில் சுயநினைவை இழந்தார். காவலர் சிவக்குமார் அந்த நபரின் நெஞ்சுப்பகுதியை கையால் அழுத்தி சுயநினைவை வரவழைத்தார்.    பின்னர் அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விரைவாக முதலுதவி அளித்த காவலர் சிவக்குமாரை அப்பகுதியில் இருந்தவர்கள் பாராட்டினர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator