ஏமனில் தவித்த 38இந்தியர்கள் மீட்பு!!

ஏமன்: புயலில் சிக்கி ஏமனில் தவித்துவந்த 38 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு திரும்பிவருகின்றனர்.
மேக்னு புயலால் ஏமன் நாட்டில் பலத்த சேதம் ஏற்பட்டது.

அங்குள்ள சொகொட்ரா தீவு சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம் என போற்றப்படும். அத்தீவு புயலால் சின்னாபின்னாமனது.
புயலில் 17பேர் மாயமாகி உள்ளனர். அத்தீவில் இந்தியாவை சேர்ந்த 3 கப்ப்பல்களில் சென்ற மீனவர்கள் கரை ஒதுங்கினர்.

38மீனவர்கள் அங்கே பத்திரமாக இருப்பதாக இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஐஎன்.எஸ். சுனன்யா இன்று சென்றது.
அங்கிருந்த அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக அழைத்து திரும்பி வந்துகொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here