மதிமுகவில் மீண்டும் சேரமாட்டேன்!

சென்னை:மதிமுகவில் மீண்டும் சேரும் திட்டமில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார் நாஞ்சில்சம்பத்.
மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார் சம்பத்.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் தினகரன் தரப்பை ஆதரித்தார்.
தினகரனின் கட்சிப்பெயரில் திராவிடம் இல்லை எனக்கூறி கட்சியில் இருந்துவிலகினார்.
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இலக்கியம், பேச்சு என்று இருந்துவருகிறார்.சென்னையில் நடந்த தமிழறிஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், நாஞ்சில் சம்பத்தும் சந்தித்துக்கொண்டனர்.
சம்பத் மதிமுகவில் மீண்டும் இணைகிறார் என தகவல்கள் பரவின. இதுகுறித்து நாஞ்சில்சம்பத் மறுத்துள்ளார்.
தமிழ் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் நானும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் வைகோவும் கலந்து கொண்டோம். இருவரும் இலக்கியம் தொடர்பாக கருத்துரைகள் வழங்கினோம்.அப்போது மரியாதை நிமித்தமாக நாங்கள் சந்தித்து பேசிக் கொண்டோம். நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை.
ம.தி.மு.க.வில் மீண்டும் சேரும் எண்ணம் இல்லை. எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் எனக்கு கிடையாது.
தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா? அல்லது பாஜக ஆட்சியா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார் நாஞ்சில்சம்பத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here