ரீமிக்ஸ் பாடல்களுக்கு பிரபல பாடகி எதிர்ப்பு!!

மும்பை: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பழைய பாடல்கள் ரீமிக்ஸ் கலாச்சாரம் குறித்த மிகுந்த வேதனை தருவதாக தெரிவித்துள்ளார்.
ஆடியோ நிறுவனங்களுக்கு, பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.

ஏக்தோ தீன் பாடலுக்கு ஜாக்குலின் பெர்னாண்டசும், லைலை மேன் லைலா பாடலுக்கு சன்னி லியோனும் நடனம் ஆடியது குறித்து லதா மங்கேஷ்கர் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
பழைய இந்தி திரைப்பட பாடல்களை தற்காலத்திற்கேற்ப மாற்றப்படுகிறது.ஆனால் பழைய பாடல்களின் வரிகளின் உண்மை தன்மையை மாற்றி பாடலின் உயிர்துடிப்பையே மாற்றி விடுகின்றனர். பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றுவது முற்றிலும் தவறு. இது மனதிற்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இதுபோன்ற பாடல்களால் இந்தி திரையுலக சாதனையர்களை கொச்சைப்படுத்த வேண்டாம். பணம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து பாடல்களை ரீமிக்ஸ் செய்ய வேண்டாம் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து பாரம்பரியத்தை காக்கவேண்டும் என கடிதத்தில் லதா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here