வாக்குச்சீட்டு இனி வரவே வராது!

கொல்கத்தா: தேர்தல் நடத்த வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பும் திட்டமில்லை என தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் உறுதியாக கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கருத்தரங்கி பங்கேற்று அவர் பேசியதாவது:

வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் எந்திரங்கள் முறைகேடு செய்யப்படுவதாக கூறப்படுவது தவறு.
அதுபோன்ற புகார்கள் ஆதாரமற்றவை. எந்திரங்கள் மீது முழுநம்பிக்கை வைக்கலாம்.
மீண்டும் வாக்குச்சீட்டுமுறைக்கு திரும்பும் திட்டம் ஆணையத்திடம் இல்லை.தேர்தலில் தோல்வியடைந்தால் யார்மீதாவது பழிபோடும் வழக்கம் எல்லோரிடமும் உள்ளது.
அதற்கு வாய்ப்பாக தற்போது தேர்தல் எந்திரங்கள் கிடைத்துள்ளன.
வாக்கு எந்திரங்களை தவறாக இணைப்பு கொடுத்து, தவறாக இயக்கினால் பிரச்சனை ஏற்படும்.
இதற்கு முழுமையான காரணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான்.

வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்க ‘ஆப்’ அறிமுகப்படுத்தியுள்ளோம்.
கர்நாடகா பேரவை தேர்தலில் இந்த ஆப் பயன்படுத்தப்பட்டது.
அதன் வழியாக 780புகார்கள் பெறப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன.
புகார் அளித்தவர்கள் பெயர்கள், விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here