சவுதி இளவரசருக்கு அல்கொய்தா எச்சரிக்கை!

ரியாத்:சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மானுக்கு அல்கொய்தா இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டத்து இளவரசராக சல்மான் பொறுப்பேற்றதும் பல்வேறு சீர்திருத்தங்களை அரசு, சமூக மட்டத்தில் கொண்டுவந்துள்ளார்.இஸ்லாமிய கோட்பாட்டுக்குள் உட்பட்டு அதேநேரம் கூடுதல் சுதந்திரத்துடன் மக்கள் இருப்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சல்மானின் சீர்திருத்தத்துக்கு அல்கொய்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அராபிய பெனிசுலா அல்கொய்தா அமைப்பு விடுத்துள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
வழிபாட்டு இடங்களை சினிமா கொட்டகையாக்கும் புதிய சகாப்தத்தை சல்மான் துவங்கியுள்ளார்.
மேலைநாடுகளின் கோரிக்கைக்கு அவர் செவிசாய்ப்பது நாட்டின் பெருமையை சீர்குலைக்கும். ஊழலுக்கு வழிவகுக்கும்.

குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் ஜிட்டா நகரில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் அரைநிர்வாணமாக வீரர்கள் பங்கேற்றனர். முஸ்லிம் பெண்கள், ஆண்கள் முன்பாக போட்டி நடந்தது. சமூகச்சீர்கேட்டின் உதாரணமாக இந்நிகழ்ச்சி விளங்கியது.
நாட்டை தவறானபாதைக்கு வழிநடத்திச்செல்லும் இளவரசருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here