மோடி, ரஜினிக்கு நடிகர் பிரகாஷ்ராஜின் கேள்விகள்!

சென்னை:மத்திய அரசை, பிரதமரை தொடர்ந்து விமர்சித்துவருகிறார் பிரகாஷ்ராஜ்.
அவரது நண்பரும், கன்னட பத்திரிகையாளருமான கவுரிலங்கேஷ் கொலைக்குப்பின் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் அரசை விமர்சிப்பதும், அதற்காக அவர் ஐடி மிரட்டல், கொலைமிரட்டலை சந்திப்பதும் நடந்து வருகிறது.தமிழ் இந்து நாளிதழுக்கு பிரகாஷ்ராஜ் அளித்தபேட்டியில் பிரதமர், தமிழக அரசு, ரஜினி, கமல் என்று அனைவரையும் கேள்வியால் துளைத்தெடுக்கிறார்.பிரதமரிடம் பிரகாஷ் ராஜ் கேட்க விரும்பும் கேள்விகள்:
தூத்துக்குடியில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டவங்களுக்குப் பிரதமர் மோடி ஏன் இரங்கல்கூட தெரிவிக்கவில்லை?
ஏன் தமிழர்கள் எல்லாம் இந்தியர்கள் இல்லையா… இல்ல, அவர் தமிழர்களுக்குப் பிரதமர் இல்லையா?
இனிமே இந்தியாவோட தேசிய விலங்கு புலியா, பசுவா?
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு பல மாதங்கள் ஆகியும், சசிகலா முதல்வராக முயலும்போது தீர்ப்பு வெளியானது ஏன்?
இது எனது கேள்விகள் மட்டுமல்ல. மக்கள் உங்களிடம் கேட்கவிரும்பும் கேள்விகள்.இதேபோன்று தமிழக அரசிடம் கேட்க விரும்பும் கேள்வி: முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இறந்த சரியான தேதி எது?சூப்பர் ஸ்டார் ரஜினி சார்கிட்ட கேட்கிறேன்… மாநிலத்தில் ‘சிஸ்டம் சரியில்லை’னு கொதிச்சிப்போய் அரசியலுக்கு வந்திருக்கிற நீங்க, தமிழ்நாட்டுல பினாமி அரசாங்கம் நடத்துற பாஜக-வை ஏன் ஒரு வார்த்தைகூட கண்டிக்கலை? மாநிலத்துல சிஸ்டம் கெட்டுப்போயிருச்சினா, மத்தியில் சரியா இருக்கா?

உலக நாயகன்’ கமல் சார்.. இது உங்களுக்கு… பலவீனமான மாநில அரசை சாட்டையை எடுத்து விளாசுறீங்க. ஆனா, மத்திய அரசு பத்தி மட்டும் ரொம்ப மென்மையா விமர்சனம் செய்றீங்க… ஏங்க? இப்படி நிறைய கேள்விகள் இருக்கு. இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
தமிழ்நாட்டுல கேள்வி கேட்டா வாயிலே சுடுவோம்னு இப்ப பதில் சொல்லி இருக்கு தமிழக அரசு. இருக்கு என்று தூத்துக்குடியில் ஸ்னோலின் வாயில் சுடப்பட்டு இறந்த சம்பவத்தை குறிப்பிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here