போன் லிஸ்டில் இல்லாத நம்பருக்கும் வாட்ஸ்ஆப் செய்யலாம்!

புதுடெல்லி: பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் தற்போது வீடியோ அழைப்புகளில் குழுவாக பேசும் வசதியை சோதனை அடிப்படையில் வழங்கியுள்ளது.பல்வேறு சிறப்பு அம்சங்களை நடைமுறைபடுத்திவரும் வாட்ஸ்ஆப் மொபைல் போனில் லிஸ்டில் இல்லாத எண்களுக்கும் குறுஞ்செய்திஅனுப்பும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.api.whatsapp.com/send?phone= என்ற தளத்தில் தொலைபேசி எண்ணை டைப் செய்து மொபைலில் சேமிக்காத நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும் வாட்ஸ் அப் மீடியாக்களில் 30 நாட்களுக்குள் டெலிட் செய்யப்பட்ட வீடியோ, புகைப்படத்தை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்ஆப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி வரும் நாட்களில் வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here