கணவன் மனைவி தகராறு! மாநகராட்சி உதவி ஆணையர் குடும்பத்துடன் தற்கொலை?

சேலம்: மோகன் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். மனைவி ரங்கநாயகி சேலம் மாநகராட்சியில் உதவி ஆணையராக பணியில் உள்ளார். இவர்களின் மகன் கிரிதரன். இவரின் மனைவி பிரேமா. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கிரிதரன் ஓசூரில்குடும்பத்துடன் தங்கியுள்ளார். ஐ.டி கம்பெனியில் இன்ஜினியராக உள்ளார்.கடந்த வாரம் கிரிதரன் குடும்பத்தினர் சேலத்தில் உள்ள தாய் ரங்கநாயகி வீட்டிற்கு வந்துள்ளனர். கிரிதரன் பிரேமாவிடையே ஏற்பட்ட வாய்தகராறு முற்றி ரங்கநாயகி உட்பட மூன்று பேருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. பிரேமாவின் பெற்றோர் ரங்கநாயகியின் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுப்பட்டுள்ளனர்.வாழ்க்கையில் வெறுப்படைந்த மோகன் ரங்கநாயகி கிரிதரன் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினர். பிரேமா குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ரங்கநாயகி தங்கைக்கு வாட்ஸ்ஆப்பில் மூவரும் தற்கொலை செய்து கொள்வதாக செய்தி அனுப்பியுள்ளார். தங்கை விஜயசெல்வி போலீசில் இதுகுறித்து புகார் தெரிவித்தார்.இந்நிலையில் ரங்கநாயகியின் மகன் கிரிதரன் வாட்ஸ்ஆப்பில் தங்கள் குடும்பத்தினரை பிரேமா குடும்பத்தினர் அசிங்கப்படுத்தி விட்டனர். அந்த பெண் மற்றும் குடும்பத்தினரால் எங்கள் குடும்பம் முடிந்தது.இவ்வளவு அசிங்க, அசிங்கமாக அவர்கள் பேசி அதுக்கு அப்புறம் உயிர் வாழ்வதைவிட போயிடலாம். அதனால் தான் இந்த முடிவை எடுத்தோம். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். இவ்வாறு அவர் பேசி உள்ளார். இந்த வாட்ஸ் அப் வீடியோ வேகமாக பரவி வருகிறது. போலீசார் இது குறித்து தீவிர விசாரணயில் ஈடுப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here