விவசாயிகளின் 10 நாள் போராட்டம்! பால், காய்கறிகள் சப்ளை இல்லை!!

பஞ்சாப்: மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஹரியானா மற்றும் சட்டிஸ்கர் எட்டு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 10 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு மண்ட்சோரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்கள் நினைவாக போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
நேற்று தொடங்கிய இந்தப் போராட்டத்தில் பஞ்சாப் விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தாங்கள் விளைவித்தவற்றை சந்தையில் விற்கமாட்டோம் காய்கறிகள் வேண்டுவோர் எங்களிடம் நேரடியாக விலைக்கு வாங்கிச் செல்லலாம் என தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இப்போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here