ஏழையின் உடலை பாடையில் சுமந்த எம்.எல்.ஏ!

அசாம்: திலிப் டே 50 வயதான இவர் அசாம் மாநிலம் ஜோர்காட் எடபா ராபர் சாரியலியை சேர்ந்தவர். இவருக்கு ஊனமுற்ற உறவினர் ஒருவர் மட்டுமே உள்ளார். மிக ஏழ்மையான நிலையில் உள்ள திலிப் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.உடல் ஊனமுற்றவர் இறுதி சடங்கு செய்வது குறித்து தவித்து வந்தார். அருகில் குடியிருக்கும் ரூபம் கோகய் மூலம் ஜோர்காட் எம்எல்ஏ ரூப்ஜோதி குர்மிக்கு தெரியவந்துள்ளது.விரைந்து வந்த ரூப்ஜோதி குர்மி இறந்தவரின் உடலை பாடையில் சுமந்து சென்று இறுதி சடங்கை முடித்து வைத்தார். அப்பகுதியில் நடந்த மற்றோரு இறுதி சடங்கிலும் கலந்து கொண்டார்.எம்.எல்.ஏ. ரூப்ஜோதி குர்மி காசிரங்கா தேசிய பூங்கா பகுதியில் பேரழிவு ஏற்பட்ட போது அரிசி மூட்டையை முதுகில் சுமந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here